வைராக்யடிண்டிமம்
|| श्रीः वैराग्यडिण्डिमः ॥
माता नास्ति पिता नास्ति
नास्ति बन्धुः सहोदरः ।
अर्थो नास्ति गृहं नास्ति
तस्मात् जाग्रत जाग्रत ॥ १ ॥
1.மாதா நாஸ்தி பிதா நாஸ்தி. நாஸ்தி பந்து சகோதரா | அர்த்தோ நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||
(இறைவனைத் தவிர்த்து இவ்வுலகில் நிரந்தரமான)
தாயோ தகப்பனோ உடன்பிறந்தவனோ உறவினனோ செல்வமோ வீடோ கிடையாது. ஆகவே (ஸம்ஸாரமெனும் உறக்கத்தில் இருப்பவர்களே) விழிமின் விழிமின்!
(ஜாக்கிரதை ஜாக்கிரதை)
जन्म दुःखं जरा दुःखं
जाया दुःखं पुनः पुनः ।
संसारसागरो दुःखं
तस्मात् जाग्रत जाग्रत ॥ २ ॥
2.ஜென்ம துஹ்கம் ஜரா துஹ்கம் ஜாயா துஹ்கம் புன:புன: | சம்சார சாகரம் துஹ்கம் தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||
பிறப்பதும் மூப்படைவதும் துக்கத்தை அளிக்கிறது. (கணவன்) மனைவி மகிழ்ச்சியளிப்பதாக பிரசித்தமான உறவும்) பலவித கஷ்டங்களைக் கொண்டதே. (தனித்தனியே
சொல்லி யாது பயன்?) கடலைப்போன்ற ஸம்ஸாரம் துக்கம் மிகுந்ததே. ஆகவே (இதிலிருந்து தப்பும் வழி யாது என்று அறிய)
விழிமின் விழிமின்!
कामः क्रोधश्च लोभश्च
देहे तिष्ठन्ति तस्कराः ।
ज्ञानरत्नापहाराय
तस्मात् जाग्रत जाग्रत ॥ ३ ॥
3.காம குரோத லோபஸ் ச தேஹெதிஷ்டதி தஸ்கரா: | ஞான
ரத்னாபகாராய தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||
ஞானமெனும் ரத்னத்தைத் திருடுவதற்கு காமம் க்ரோதம் லோபம் ஆகிய திருடர்கள் உடலிலேயே இருக்கிறார்கள். ஆகவே விழிமின் விழிமின்!
आशया बध्यते जन्तुः
कर्मणा बहुचिन्तया ।
आयुः क्षीणं न जानाति
तस्मात् जाग्रत जाग्रत ॥ ४
4.ஆஷயா பத்யதெ ஜந்து: கர்மணா பஹுசிந்தயா| ஆயு: க்ஷீணம் நஜானாதி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||
ஆசைகள் வினைப்பயன்கள் பலவித கவலைகள் இவற்றால் மனிதன் தளைப்படுகிறான். (இதிலேயே) ஆயுள் தீர்ந்துவிடுவதை அறிவதில்லை. ஆகவே விழிமின் விழிமின்!
क्षणं वित्तं क्षणं चित्तं
क्षणं जीवितमावयोः ।
यमस्य करुणा नास्ति
तस्मात् जाग्रत जाग्रत ॥ ५ ॥
5.க்ஷண வித்தம் க்ஷணசித்தம் க்ஷணம் ஜீவிதமாவயோ:| யமஸ்ய கருணா நாஸ்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத ||
பணமோ ஆசையோ (சொல்பவன் கேட்பவன் ஆகிய) நம்மிருவரது வாழ்க்கையோ (ஒரு) கணத்திற்கு (மேல் இருக்குமென்று சொல்ல முடியாது). ஆகவே விழிமின் விழிமின்!
यावत्कालं भवेत् कर्म
तावत् तिष्ठन्ति जन्तवः ।
तस्मिन् क्षीणे विनश्यन्ति
तस्मात् जाग्रत जाग्रत ॥ ६ ॥
6.யாவத்காலம் பவேத் கர்மா தாவத் திஷ்டந்தி ஜந்தவ:| தஸ்மின் க்ஷீணே விநஸ்யன்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||
(தான் இப்பிறப்பில் அனுபவிக்க வேண்டிய) வினைப்பயன் எவ்வளவு நாள் இருக்குமோ அவ்வளவே மக்கள் வாழ்வர். அது தீர்ந்தால் இறந்துவிடுவர். ஆகவே விழிமின் விழிமின்!
ऋणानुबन्धरूपेण पशुपत्नीसुतादयः ।
ऋणक्षये क्षयं यान्ति
तस्मात् जाग्रत जाग्रत ॥ ७ ॥
7.ருணாநு பந்த ரூபேண பஸு பத்னி ஸுதாதய:| ருணக்ஷயே க்ஷயம் யாந்தி தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||
(ஒவ்வொருவரிடமும்) கடன்பட்டதனால் சேர்க்கப்பட்டு மனைவி மக்கள் (ஏன்) கால்நடை முதலியவை கூட (ஏற்படுகின்றனர்). (அந்த) கடன் தீர்ந்தால் (அவர்களும்) விலகி விடுவர். ஆகவே விழிமின் விழிமின்!
सम्पदः स्वप्नसङ्काशाः
यौवनं कुसुमोपमम् ।
विद्युच्चञ्चलम् आयुष्यं
तस्मात् जाग्रत जाग्रत ॥ ८ ॥
8.ஸம்பத ஸ்வப்ன ஸங்காஸா யௌவனம் குஸுமோபமம்| வித்யுத் சஞ்சலம் ஆயுஷ்யம்
தஸ்மாத் ஜாக்கிரத ஜாக்கிரத||
செல்வங்கள் ஸ்வப்நத்தைப் போன்றவை (நிலையாதவை). இளமை பூவினைப் போன்றது (குறிப்பிட்ட காலம் மட்டுமே வாடுவதற்கு முன் அழகாக இருக்கும்). உயிரோ மின்னலைப் போல் சஞ்சலமானது (எப்பொழுது தோன்றும் மறையும் என்று தெரியாது). ஆகவே விழிமின் விழிமின்!
पक्वानि तरुपर्णानि
पतन्ति क्रमशो यथा ।
तथैव जन्तवः काले
तत्र का परिदेवना ॥ ९ ॥
9.பக்வானி தரு பர்ணானி பதந்தி க்ரமஸோ யதா| : ஜந்தவ: காலே
தத்ர கா பரிதேவனா ||
மரத்தின் காய்ந்த இலைகள் ஒவ்வொன்றாக எப்படி விழுகின்றனவோ அதுபோல் காலம் வந்தால் மக்களும். அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?
एकवृक्षसमारूढाः नानाजातिविहङ्गमाः ।
प्रभाते क्रमशो यान्ति
तत्र का परिदेवना ॥ १० ॥
10.ஏக வ்ருக்ஷ ஸமா ரூட நாநாஜாதி விஹங்கமா:| ப்ரபாதே க்ரமஸொ யாந்தி தத்ர கா பரிதேவனா ||
பல ஜாதி பறவைகள் (இரவில்) ஒரே மரத்தில் குடியிருப்ப. (ஆனால்) காலை வந்தவுடன் தனித்தனியே (அவ்வவற்றின் இரையைத் தேட) செல்லுப. அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?
॥ इति वैराग्यडिण्डिमः सम्पूर्णः ॥
No comments:
Post a Comment