आनंद नृत्त समये नटराज राज-
पादारविन्दमणिनूपुरशिञ्जितानि ।
आनन्दयन्ति मदयन्ति विडम्बयन्ति
सम्मोहयन्ति नयनानि कृतार्थयन्ति ॥
ஆநந்தந்ருத்த ஸமயே நடராஜராஜ
பாதாரவிந்த மணி நூபுர சஞ்ஜிதாநி
ஆநந்தயந்தி மதயந்தி விடம்பயந்தி
ஸம்மோஹயந்தி நயநாநி க்ருதார்த்தயந்தி
#Kirupa
நடராஜர் ஆநந்த தாண்டவம் செய்யும் சமயத்தில்
அவருடைய பாதங்களில் கட்டியிருக்கும் சலங்கைளுடைய த்வனிகள் என்னை ஆனந்த படுத்துகின்றன.
வெறி உண்டாகும்படி செய்கின்றன
மோகத்தைக் கொடுக்கின்றன;
கண் காதுகளைக் கிருதார்த்தம்
செய்கின்றன.
திருவாதிரை ஆருத்ரா தர்ஶனம்
कृपासमुद्रं सुमुखं त्रिनेत्रं जटाधरं पार्वतिवामभागं ।
सदाशिवं रुद्रमनन्तरूपं चिदम्बरेशं हृदि भावयामि ॥
க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதிவாம்பாகம் ।
ஸதாஶிவம் ருத்ரமநந்தரூபம் சிதம்பரேஶம் ஹ்ருதி பாவயாமி ।।
#KIRUPA
இருபத்தியேழு நக்ஷத்ரங்களுக்குள் பரமேஶ்வரனின் நக்ஷத்ரமான திருவாதிரையும் மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமான திருவோணத்துக்கும் தான் திரு என்னும் அடைமொழி உண்டு தர்ஶனம் செய்த மாத்திரத்திலேயே முக்தியை பெற்றுதரும் க்ஷேத்ரம் தில்லை என்னும் கனக ஸபாபதி க்ஷேத்ரமான ஶிவ சிதம்பரம் நாம் பேசும் ஒவ்வொரு எழுத்தும் முதன் முதலில் தோன்றியது இந்த நடராஜனின் நடன சமயத்தில்தான் ஆனந்த நடனம் புரியும் இவரின் கைகளில் இருக்கும் உடுக்கைக்கு டமருகம் எனப்பெயர் இன்று பரமேஶ்வரனை ப்ரார்தித்து நாம் வாழ்க்கை பயனை பெறுவோம்.
No comments:
Post a Comment